கொரோனாவிற்கு எதிரான போரில் மிக பெரிய ஆயுதமாக தடுப்பூசி விளங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படுகிறது.
மேலும், நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடக்கிறது. தற்போது கொரோனாவினால் அதிமோசமாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
Read more – மே 2 ம் தேதி காலை 8. 30 மணி முதல் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கும் : சத்யபிரதா சாகு தகவல்
இந்தநிலையில், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்து வரும் மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பிறகு பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் மிக பெரிய ஆயுதம் தடுப்பூசி. அதனால், அதிக அளவிலான நோயாளிகளை தடுப்பூசி போட்டு கொள்ளும்படி ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.