பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து விசாரத்து வருவதாக, டுவிட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
டுவிட்டரில், பிரதமர் மோடி உலகளவில் சிறந்த தலைவர்களில் ஒருவர். அவரது தனிப்பட்ட இணையதளத்திற்கான @narendramodi_in என்ற டுவிட்டர் கணக்கு, 2009-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதனை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் ஹாக் செய்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பிற்கான, பிரதமரின் தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு, அனைவரும் பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று குறிப்பிட்டு டுவிட்டர் கணக்கை முடக்கியுள்ளனர்.
பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் தான், மோடியின் கணக்கை முடக்கியுள்ளதாக, டுவிட்டரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிரதமரின் தனிப்பட்ட கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக, டுவிட்டர் நிறுவனம் உறுதியளித்து, சம்பந்தப்பட்ட டுவீட்களயும் நீக்கியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
மேலும், வேறு ஏதேனும் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதா என விசாரணை நடைபெற்று வருவதாகவும், மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கிற்கும், பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் கணக்கிற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.