பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.
ஜெய்சால்மர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் என்னும் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார் .இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, எல்லை பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் பிரதமர் உரையாடியபோது:
நாட்டு மக்களுடைய அன்பையும் வாழ்த்தையும் உங்களுக்காக நான் பரிமாறி கொள்கிறேன்.மக்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கும். ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த இந்திய நாட்டு மக்கள் அவர்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.மேலும் பிரதமர் மோடி,ராணுவ வீரர்களுடன் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில் எனக்கு பெருமிதமாகவும், மன நிறைவாக இருக்கிறது. பனிமலையாக இருந்தாலும் சரி,அது பாலைவனமாக இருந்தாலும் சரி ராணுவ வீரர்கள் எங்கு உள்ளனரோ அங்குதான் எனக்கும் தீபாவளி. உங்களின்முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை நான் காணும்போது இரு மடங்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதனை தொடர்ந்து 130 கோடி இந்தியர்களும் உங்களுடன் துணை நிற்கிறார்கள். ஒவ்வொரு இந்திய பெருமக்களும் நம் வீரர்களின் வலிமை மற்றும் வீரம் குறித்து பெருமைப்படுகிறார்கள். நம் நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுக்க நிறுத்த முடியாது இவ்வாறு மோடி பேசினார்.