பிரதமர் மோடி 15 மாதங்களுக்கு பிறகு இரண்டு நாள் பயணமாக இன்று வங்கதேசம் சென்றுள்ளார்.
புதுடெல்லி :
இந்திய பிரதமர் மோடி ஆண்டுதோறும் பல நாடுகளுக்கு பயணம் செய்துவருவார். கடைசியாக பிரதமர் கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது கடைசி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு இருந்தார். அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோன பரவல் காரணமாக பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எங்கும் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில், 15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இன்று நடைபெறவுள்ள வங்கதேச தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், எனது பயணம், பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் வங்கதேசம் அடைந்துள்ள வியப்பூட்டும் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்பாடு, இதற்கு இந்தியா பாராட்டு தெரிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக மட்டுமல்லாமல் இந்த சாதனைகளுக்கு இந்தியாவின் பங்கும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.