3 முக்கிய நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
புதுடெல்லி:
ஆமதாபாத்,புனே,ஹைதராபாத் போன்ற பகுதிகளில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார். முதலில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் பகுதியில் உள்ள சாங்கோதர் தொழிற்பேட்டையில் ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு காலை 9.30 மணிக்கு நேரில் பார்வையிட்டு, அந்நிறுவனம் உருவாக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2 ம் கட்ட பரிசோதனை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்து,மேலும் தடுப்பூசியின் உற்பத்தி பணிகளை பார்வையிடுகிறார்.
அதனை தொடர்ந்து, மோடி மராட்டிய மாநிலம் புனேவுக்கு சென்று அங்குள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகாவுடனும், இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும் இணைந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகிறது. அங்கு நடைபெறும் 3 வது கட்ட பரிசோதனையை பகல் 1 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை ஆய்வு செய்து தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
அதன்பிறகு பிரதமர் மோடி விமானம் மூலம் அங்கிருந்து ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சென்று இந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி, 3 வது கட்ட பரிசோதனையில் உள்ளது,அதைப்பற்றிய முன்னேற்றம் குறித்தும் ஒரு மணி நேரம் அங்கு ஆய்வை பிரதமர் மோடி நடத்துகிறார். இன்று மாலையில் டெல்லி திரும்புகிறார்.