“புத்தரின் கொள்கைகள் சமகால சவால்களுக்கும் வழிகாட்டி” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான 6-வது சம்வாத் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன். இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான மிகப் பழமையான, ஆன்மீக மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படை நோக்கத்தை சம்வாத் கூட்டம் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாரம்பரிய புத்தமத இலக்கியம் மற்றும் வேதங்கள் தொடர்பாக புதிய நூலகம் ஒன்று அமைக்கப்படும். அத்தகைய வசதியை இந்தியாவில் ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்தியா வழங்கும். இந்த நூலகம் ஆராய்ச்சி மற்றும் உரையாடலுக்கான ஒரு தளமாகவும் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
Read more – வருகிற ஜனவரி 9 ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் : முதல்வர் துணைமுதல்வர் அறிவிப்பு
புத்தரின் செய்திகள் சமகாலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் எப்படி வழிகாட்டியாக திகழ்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.