வேளாண் சட்டங்களை எதிர்க்கும் வகையில் 1,400 செல்போன் கோபுரங்களை பஞ்சாப் விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

பஞ்சாப்:
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே ஒரே நோக்கமாக கொண்டு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராது டெல்லியில் எல்லைகளை ஆக்கிரமித்து தங்களது முழுப்பலத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இந்த குளிரின் தாக்கத்தால் 40 க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை(டிசம்பர்.29) மத்திய அரசிற்கும் விவசாய அமைப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more- இன்றைய ராசிபலன் 28.12.2020!!!
இந்தநிலையில், நேற்று பஞ்சாப்பின் ஜலாலாபாத்தை சேர்ந்த அமர்ஜித் சிங் என்ற வக்கீல் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் அம்பானி மற்றும் அதானிக்கு சொந்தமான ஏறக்குறைய 176 செல்போன் கோபுரங்களை அவர்கள் சூறையாடி சேதப்படுத்தியும், இதுவரை மொத்தமாக இதுவரை 1,411 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த 25 ம் தேதி கோரிக்கை வைத்தார்.ஆனால் அதையும் வேண்டுகோளையும் ஏற்காமல் விவசாயிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று, மங்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய போது விவசாயிகள் தட்டுகளை தட்டி ஓசை எழுப்பி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




