பிரான்ஸில் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ள ரஃபேல் போர் விமானங்கள் இன்று (திங்கட்கிழமை) இந்தியா புறப்பட்டுள்ளன.
குறித்த விமானங்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸிடம் இருந்து இந்தியா 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் முதற்கட்டமாகவே மேற்படி 5 விமானங்கள் இந்தியா வரவுள்ளன.
இவற்றில் மூன்று இரட்டை இருக்கை (RAFALE DH) மற்றும் 2 ஒற்றை இருக்கை (RAFALE EH) ஆகிய விமானங்கள் இந்தியா வரவுள்ளன.
இவை இந்திய விமானப்படையின் 17ஆவது படையணியில் (NO17 GOLDEN ARROWS SQN) இணைய உள்ளன. இந்த படையணி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அன்றைய தினமே விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரஃபேல் விமானங்களில் இந்தியாவிற்கு புறப்பட்ட விமானப்படையின் விமானிகளை பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது