மோடி அரசுக்கு எதிராக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
கடந்த ஒரு மாத காலமாக நாடுமுழுவதும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு வரலாறு உச்சத்தை எட்டி உள்ளது. இதற்கு நாடுமுழுவதும் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதில், பா.ஜனதாவின் எரிபொருள் கொள்ளை என்ற ஹேஷ்டேக்குடன் பெட்ரோல் பங்க்களில் உங்கள் கார் அல்லது இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புகையில், வேகமாக ஓடும் மீட்டரை பார்க்கும்போது ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
Read more – தமிழக இடைக்கால பட்ஜெட்… ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல்…
கச்சா எண்ணெய் விலை எங்கும் உயரவில்லை குறைந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய். மோடி அரசு, சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்து தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மாபெரும் பணியை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.