பற்றி எரிந்த கட்டிடத்திற்குள் மிகவும் மன உறுதியுடன் புகுந்து குழந்தைய மீட்ட காவலரை பாராட்டிய முதல்வர் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கராவ்லி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு கலவரமாகி உருவாகி கல் வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. அப்பகுதியில் இருந்த வீட்டுக்கு மர்ம நபர்கள் சில தீ வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நேத்ரேஷ் சர்மா அதை பார்த்துவிட்டார்.
அந்த வீட்டுக்குள் பச்சிளம் குழந்தை இருப்பதை தெரிந்துகொண்ட அவர், உயிரை துச்சமாக கருதி வீட்டுக்குள் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டார். மேலும் சிலரையும் அந்த சம்பவத்தில் இருந்து மீட்டார். காவலர் நேத்ரேஷ் சர்மா குழந்தையை மீட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
இதை பார்த்த ராஜஸ்தான் முதல் அசோக் கெலாட், காவலர் நேத்ரேஷுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் விரைவில் அவருக்கு தலைமைக் காவலராக பதவி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.