பகுதியில் ராணுவ வீரர்கள், இந்திய-திபெத் வீரர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கிழக்கு லடாக் எல்லையில் நடந்த பிரச்சினை, எல்லைப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக சீனாவுடன் இந்தியத் தரப்பில் பேச்சு நடந்து வருகிறது. இந்த பேச்சின் மூலம் அந்த எல்லைத் தீர்க்கப்படலாம்!
ஆனால், தீர்க்கப்படும் என்று உறுதியளிக்க முடியாது! பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் அதைவிடச் சிறந்தது வேறுஏதும் இல்லை!!
நான் உங்களுக்கு ஒன்று உறுதியளிக்கிறேன்! இந்தியா ஒன்றும் பலவீனமான நாடு கிடையாது! இந்தியாவின் நிலப்பகுதியில் ஒரு இன்ச் பகுதியைக் கூட எடுக்க உலகில் எந்த சக்தியும் கிடையாது!
சமீபத்தில் கிழக்கு லடாக்கின் பிபி14 பகுதியில் சீனா ராணுவத்துடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் எல்லையைக் காக்கும் போரட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். இந்த நேரத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,
அதேநேரத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காகவும், அவர்களை இழந்ததற்காகவும் வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.நம்முடைய வீரர்களின் உயிர்த்தியாகம் ஒருபோதும் வீணாக அனுமதிக்கமாட்டோம்!இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்!