ராமர் பாலம் ராமர் கட்டியது அல்ல, வெறும் மணல் திட்டுதான் என்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் புனிதமாக கருதப்படும் “ராமர் பாலம்” தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் அழக்கப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். ராமர் சேது பாலம் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை அல்ல ! அவை காலநிலை மாற்றத்தில் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே. ராமர் பாலம் தொல்லியல்துறையின் கீழ் கொண்டுவரக்கோரி சுப்ரமணியசுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறியுள்ளார். ராமர் பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள்ளது. மீதம் உள்ள பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவேளை தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும் ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும் ? என தெரிவித்தார்.