தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று மாலை டெல்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 22ந் தேதி டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது டெல்லியில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கவர்னர் ரவியை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் இன்று மாலை 5.15 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2வது முறையாக டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ஆகியோரை சந்திக்கிறார். அப்போது தமிழக நிலவரங்கள் குறித்தும் பிரதமரிடம் பேசுவார் என கூறப்படுகிறது.




