ஆந்திராவில் சொந்த வீடு கட்ட இரும்பு பெட்டியில் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கரையான் அரித்த சோகம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் சேர்ந்த ஜமாலியா. இவர் பன்றி மேய்த்து குடும்பம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பணத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்குவற்கு தெரியாமல் தனது சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதற்காக தான் தங்கியிருக்கும் வாடமை வீட்டிலேயே இரும்பு பெட்டியில் தனது உழைப்பில் சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக பாதுகாத்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பணம் வைத்திருந்த இரும்பு பெட்டியை திறந்து பார்க்கவில்லை.
இந்நிலையில் இரும்பு பெட்டியை சில நாட்களுக்கு முன்பு திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளையும் கரையான்கள் அரித்துவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதையும் கரையான் அரித்து விட்டதால் வேதனையின் உச்சத்தில் தள்ளப்பட்டார். அரசு அவருக்கு இழந்த பணத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.