ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுக்காக மத்திய அரசு அத்துணை நடவடிக்கைகளையும் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இதில் மாநில அரசுகளும் ஒத்துழைத்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் குறைந்துள்ளதாக சமீபத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் கொரொனா இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
எந்த வேறுபாடுகளும் இன்றி சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் , சாதாரண மக்கள் முதற்கொண்டு அனைவரையும் கொரொனா தொற்று தாக்கிவருகிறது.
எனவே ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸுக்கு இன்று தனது டுவிட்டரில் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்த அறிகுகள் எதுவும்தென்படாததால் தான் வீட்டில் தனிமையில் இருந்து பணிகளைக் கவனிப்பதாகத் தெரிவித்துள்ளார்




