பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.
பெங்களூர் :
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் இன்று (பிப்.8) பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை திரும்புகிறார். இதையடுத்து தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை இல்லம் வரை அமமுக தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்க காத்திருக்கின்றனர்.
Read more – பாலக்காட்டில் 6 வயது மகனை கொன்ற தாய் : அல்லாஹ்விற்கு தியாகம் செய்ததாக வாக்குமூலம்
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சசிகலா அதிமுக கொடியுடன் தமிழகம் புறப்பட்டார். அவருடன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த இளவரசியும் உடன் வருகிறார்.மேலும், டிடிவி தினகரன் நேரில் சென்று சசிகலாவை காரில் அழைத்து வருகிறார்.