பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை உள்ளது
இந்த நிலையில், மேலும் 275 சீன செயலிகள் தடை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் கடந்த மாதம் டிக்டாக், கேம் ஸ்கேனர், ஷேர்இட், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீது மத்திய அரசு தடை விதித்தது. இதனைதொடர்ந்து மேலும் சில செயலிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், முன்னதாக தடை செய்யப்பட்ட செயலிகளின் 47 ‛க்ளோன்’ செயலிகளுக்கும் கடந்த ஜூலை 24ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது.
அதாவது டிக்டாக் லைட், கேம் ஸ்கேனர் அட்வான்ஸ் உள்ளிட்ட செயலிகளும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பப்ஜி, ரெஸ்ஸோ உள்ளிட்ட செயலிகளும் உள்ளன.