‘ஆடைக்கு மேலே சிறுமியின் மார்பகங்களை தொடுவது’ போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை ஆகாது’ என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய உத்தரவிற்கு எதிரான மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஆடைக்கு மேலே உடலை சீண்டி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு பல்வேறு தளத்திலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைகளை கழற்றாமல் தான் அவரது உடலை சீண்டி உள்ளார் எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுக்கும் போஸ்கோ சட்டத்தின்கீழ் இது குற்றமாகாது என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதாவது உடம்புடன் உடம்பு உரசி அதன் மூலம் மேற்கொள்ளப்படுவது மட்டும்தான் “போக்சோ” சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அந்த சமயம் இந்த விவகாரம் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த விவகாரம் தொடர்பாக முறையிட்டார். மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருப்பதாகவும் எதிர்காலத்தில் இது பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும் அபாயம் இருப்பதாகவும் தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்
தலைமை வழக்கறிஞரின் இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கியதோடு இந்த வழக்கிலிருந்து குற்றவாளியை விடுவித்த மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இரண்டு தினங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு செய்து வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.




