மேற்கு வங்க முதல்வர் மீதான தாக்குதல் வெட்கக்கேடானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை :
பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் சுவந்த் அதிகாரிக்கு எதிராக நந்திகிராமத்தில் போட்டியிடும் மம்தா பானர்ஜி நேற்று மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து பிருலியா என்ற இடத்தில் மம்தா கோவிலில் சாமி தரிசம் செய்து விட்டு வெளிய அவரது கார் அருகே நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட குழு காரின் முன்பக்க கதவை அடைத்ததில் மம்தாவின் காலில் பலமாக தாக்கியது. மேலும், அந்த மர்ம கும்பல் அவரை வேகமாக கீழே தள்ளியது. இதனால் மம்தாவின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் கொல்கத்தா மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Read more – குஷ்பூ, கௌதமி கனவு கரைகடந்தது… உழைப்போ ஊருக்கு… தொகுதியோ மற்றவருக்கு ?
இந்தநிலையில், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மம்தா மீது தாக்குதல் நடத்திய குற்றத்தை செய்தவர்கள் உடனடியாக நீதிக்கும் முன் கொண்டுவரப்பட வேண்டும் எனவும், வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மம்தா விரைவாக நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.