வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாம் பாதிக்கப்பட்டத்தை கருத்தில் கொண்டு, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சில வங்கிகள் வட்டிக்கு வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது.
அதில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கபட்டது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் வட்டிக்கு வட்டி செலுத்தி இருந்தால் அதை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சில வங்கிகள் இந்த உத்தரவை அமல்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கூறினர். அதற்க்கு நீதிபதிகள், தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ அதற்குள் செய்ய வேண்டும்.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை, உங்களிடம் கொடுக்கப்பட்ட கூடுதல் பணத்தைதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப் போகிறீர்கள், இதனால், உங்களுக்கு சிரமம் இருக்காது. ரூ. 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு விரைவில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை வருகின்ற நவம்பர் 02-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.




