தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண்கள் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பதவி உயர்வுக்கான இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, மதிப்பெண் அடிப்படை , சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத டி.என்.பி.எஸ்.சி செயாலளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த 27 ஆம் தேதி தீர்ப்பு தேதிக்குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண்கள் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூறியதோடு இந்த தீர்ப்பை 12 வாரத்தில் செயல்படுத்தவும் டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படை சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கடந்த 2019 நவம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை 8 வாரத்தில் அமல்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி செயலாளருக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என கூறி டி.என்.பி.எஸ்.சி செயாலளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் பல்வேறு தரப்பில் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே வழங்கிய தீர்பை மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியது உச்சநீதிமன்றம்.