நாட்டில் உள்ளோர் ஜம்மு –காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்கினால், அங்கு பாலியல் வன்கொடுமை அதிகரிக்கும் ’’என்று பிடிபி தலைவர் சுரிந்தர் சவுத்ரி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் கடந்த ஆண்டு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் யுனியன் பிரதேசமாக சட்டங்களைத் திருத்தியது.
வேறு எந்த மாநிலத்தவரும் அங்கு தொழில் தொடங்கலாம், நிலம் வாங்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் பிடிபி தலைவர் சுரிந்தர் சவுத்ரி,’’ நாட்டில் உள்ளோர் ஜம்மு –காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்கினால், அங்கு பாலியல் வன்கொடுமை அதிகரிக்கும் ’’என்று பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இதற்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் குவிந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள சவுத்ரி, வெளிய மாநில மக்கள் இங்கு வந்து நிலம் வாங்கினால் பாலியல் குற்றங்களைத் தொடங்குவார்கள் என்பதாகக் கூறவில்லை. அவர்கள் ஜம்மு- காஷ்மீர் மக்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பார்கள் , சமீபத்தில் மாநிலத்தில் மற்ற இடங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. அதனால் தான் இவ்வாறு கூறினேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.