புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்க இருக்கிறார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா நேற்று மாலையுடன் ஓய்வு பெற்ற நிலையில் இன்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்க இருக்கிறார். சமீபத்தில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வரும் மே மாதம் 2 ம் தேதி வெளிவரும் நிலையில் சுஷில் சந்திரா பதவி ஏற்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. சுஷில் சந்திரா பதவி காலத்தில் கோவா, மணிப்பூர் உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.
Read more – பிளஸ் 2 மொழித்தேர்வு தேதி தீடிர் மாற்றம் ஏன் ? தேர்வுகள் இயக்ககம் விளக்கம்..
மேலும், சுஷில் சந்திரா இன்று (ஏப்ரல். 13) பதவியேற்று வரும் 2022 ம் ஆண்டு மே 14 ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.