அமீரகத்தில் பள்ளிக்கூட ஆசிரியையாக பணியாற்றி வந்த சையத் ரபாத் பர்வீன் நேற்று டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
அமீரகத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத் ரபாத் பர்வீன் (41). இவருக்கு திருமணமாகி தான் சொந்த ஊரான டெல்லியில் இவரது 2 மகன்கள் படித்து வருகின்றனர். அமீரகத்தில் தற்போது விடுமுறை என்பதால் டெல்லி வந்த சையத் ரபாத் பர்வீனுக்கு கடந்த டிசம்பரில் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது.
Read more – மேற்கு வங்காளத்தில் நடந்த அதிசயம் : சிறுத்தையுடன் வெற்றுக்கரங்களுடன் சண்டையிட்ட பெண்
தலைவலி மேலும் அதிகரிக்க தன் வீட்டுக்கு அருகில் இருந்த நரம்பியல் நிபுணராக பணியாற்றி வரும் தனது மைத்துனரான டாக்டர் அன்வர் ஆலம் என்பவரிடம் சென்று உடல்நிலையை பரிசோதித்தார். அப்பொழுது அவருக்கு மூளையில் உள்ள ரத்தநாளம் வீங்கி வெடிக்கும் நிலையில் உள்ளதை டாக்டர்கள் கண்டறிந்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், அவருக்கு வென்டிலேட்டரில் செயற்கை சுவாசம் தரப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 24 ம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
அதன்பிறகு, வரது குடும்பத்தினர் அனுமதியுடன் அவரது உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டு 2 கண்நோயாளிகள் உள்ளிட்ட 6 பேர் வாழ்ந்து வருகின்றனர். தான் மரணித்தும் 6 பேரை வாழ வைத்ததாக சமூக ஊடகங்களில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.