80 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ள “ஏர் இந்தியா” நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏல போட்டியில் டாடா குழுமம் வென்றது.
கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டே பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை எந்த பலனும் அளிக்காததால் அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது. இதற்கு இடையே கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் பயணிகள் விமான சேவை “0” என்ற அளவில் முடங்கிய நிலையில் எந்த பெரு நிறுவங்களும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை.
இந்நிலையில் அண்மையில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட ஜோதிர் ஆத்திய சிந்தியா ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க முனைப்போடு செயல்பட்டார். இந்நிறுவனம் 75-80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி நெருக்கடியில் உள்ளதாக தெரிவித்து அவற்றை விலை கேட்க பெரு விமான நிறுவங்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும், விலை கேட்பதற்காக கடந்த தேதி செப்டம்பர் 15 தேதியே இறுதி நாள் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து இருந்த நிலையில் இறுதி நேரத்தியில் டாடா குழுமம், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனமும் நிதி ஏல போட்டியில் விலை கேட்டது.
இந்நிலையில் ஏல போட்டியில் டாடா குழுமம் வென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் அதற்கான முடிவுகள் கையெழுதிடப்பட்டு அதிகாரபூர்வமாக ஏர் இந்தியா டாடா குழுமத்திடம் ஒப்படைக்கபடும் என தெரிகிறது. ஏற்கனவே டாடா குழுமம் விஸ்தாரா எனும் விமான சேவையை சிங்கப்பூர் டாடா குழுவுடன் இணைந்து டெல்லியில் இருந்து உள்நாட்டு விமான சேவையை கவனித்து வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும் வாங்கப்பட்டால் கூடுதல் சேவைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. செப்டம்பர் 12ம் தேதி SIA (Singapore Airlines) விமான நிறுவனம் , டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கினால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் உடன் இணைத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.