ஸ்கூலுக்கும் லேட்டாகுது என மாணவரின் ட்வீட்டால் பேருந்து நேரத்தை புவனேஸ்வர் போக்குவரத்துத்துறை மாற்றியுள்ளது.
ஒடிசா :
ஒடிசாவில், பேருந்து நேரம் காரணமாக பள்ளிக்கு தினமும் தாமதமாக செல்வதாக மாணவர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டவுடன், அந்த மாணவனுக்காக பேருந்து நேரத்தையே புவனேஸ்வர் போக்குவரத்துத்துறை மாற்றியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த சாய் அன்வேஸ் என்ற மாணவன், பேருந்து தாமதமாக வருவதனால் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு 7.40 மணிக்கு செல்லவேண்டியுள்ளது எனவே எனது பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் என்று ட்விட்டரில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த பதிவில் புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர், போத்ரா ஐபிஎஸ்-ஸையும் டேக் செய்திருந்தார். அப்பதிவில் “நான் புவனேஸ்வர் எம்பிஎஸ் பள்ளியில் படிக்கிறேன், லிங்கிப்பூரிலிருந்து வரும் என்னுடைய பேருந்து தாமதமாக வருவதால், நான் தினமும் பள்ளிக்கு தாமதமாக செல்கிறேன். இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன், பல சிக்கல்களை சந்திக்கிறேன், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என பதிவிட்டிருந்தார்
Read more – விஜய் சேதுபதி ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..!!
சில மணிநேரங்களில் இதற்கு பதிலளித்த புவனேஸ்வர் போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர் அருண் போத்ரா “ உங்கள் பேருந்து நேரம் 7 மணியாக மாற்றப்பட்டுள்ளது, இனி நீங்கள் பள்ளிக்கு தாமதமாக செல்ல வேண்டாம்” என தெரிவித்தார். மாணவரின் சிரமத்தை உணர்ந்து உடனடியாக பேருந்து நேரத்தை மாற்றிய புவனேஸ்வர் போக்குவரத்து துறையையும், சம்யோஜிதமாக ட்விட்டரில் கோரிக்கை வைத்த மாணவனின் செயலையும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.