ஜனவரி 1 ம் தேதி முதல் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.
புதுடெல்லி :
கொரோனா பொதுமுடக்கம், தென்மேற்கு பருவமழை போன்றவைகளால் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதனால் சில்லறை மற்றும் மொத்த விற்பனை ஆகியவற்றில் வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து புது உச்சத்தை தொட்டது.
Read more – கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வர முடியவில்லை, என்னை மன்னியுங்கள் : ரஜினி காந்த் தீடிர் அறிவிப்பு
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. தற்போது பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், ஜனவரி 1 ம் தேதி முதல் அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.