குடும்ப சூழல் காரணமாக 63 வயதில் திருமணம் செய்துகொண்ட ஒருவரின் மனைவி சில மணிநேரத்திலேயே இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் :
குஜராத் மாநிலம் பீப்பல்சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்பாய். 63 வயதான இவருக்கு குடும்ப சூழ்நிலை மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக பல ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை. மேலும், இவரது குடும்பத்தில் தந்து மனநலம் பாதித்த தம்பி மற்றும் விதவை அக்கா ஒருவரையும் பொறுப்புடன் கவனித்து வந்துள்ளார்.
இதனால், தொடர்ந்து கல்யாண்பாய் திருமணம் தடைபட்டு வந்தநிலையில் எத்தனை வயதானாலும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை மட்டும் அவருக்கும் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், அவரை மணந்துகொள்ள லைலாபென் ரபரி என்ற 40 வயது பெண் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்யாண் பாய் மற்றும் லைலாபென் ரபரி ஆகியோரின் திருமணம் உறவினர்கள் முன்னிலையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
Read more – இந்தியா டு சிங்கப்பூர் பஸ்ஸில் செல்ல ஆசையா ? இதோ வந்திட்டது உங்களுக்காக..
மணமகன் வீட்டிற்கு புதுமணத்தம்பதிகள் சென்ற போது, அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென மணப்பெண் லைலாபென் ரபரி மயங்கி தரையில் விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் லைலாபென்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, லைலாபென் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைகேட்டுயறிந்து கல்யாண் கதறி கதறி அழுது, இறுதி சடங்கும் செய்துள்ளார். 63 வயதில் திருமணம் செய்துகொண்ட கல்யாண் நினைத்து பூரித்துப்போன கிராம மக்கள் இப்பொழுது புதுப்பெண் உயிரிழந்ததால் மொத்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.