தேர்தல் முடிவுக்கான பிந்தைய கருத்துக்கணிப்பை ஏப்ரல் 27 வரை வெளியிட தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி :
தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கத்தில் தொடந்து 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஏப்ரல் 29 ம் தேதி தேர்தல் முடிவடைகிறது.
Read more – தமிழக சட்டமன்ற தேர்தல் : 71.79 சதவீதமாக வாக்குப்பதிவு
இந்தநிலையில், எனவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவும், அதன் முடிவுகளை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி போன்ற முக்கியமான ஊடகங்களில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 ஆண்டு 126ஏ பிரிவு துணைப்பிரிவு 1 ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது இந்த தடையை விதித்துள்ளது.