JEE, நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தினை குறைக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக நாடுமுழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. இதேபோல் இந்தியாவில் தற்போது முக்கிய தேர்வுகளாக கருதப்படும் JEE மற்றும் நீட் தேர்வுகளில் பாடத்திட்டங்களில் பாடத்திட்டம் குறைக்கப்பட வேண்டும் என்று மாணவர்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த கல்வியாண்டில் நடைபெற இருக்கும் JEE, நீட் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும், விருப்பத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் பாடத்திட்டங்கள் குறைக்க முடியாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Read more – ஜல்லிக்கட்டில் காளைக்களை அடக்குவது போல் தேனியில் பன்றியை அடக்கும் போட்டி…
மேலும், JEE தேர்வில் 90 கேள்விகள் கேட்கப்பட்டு அதில் 75 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது என்றும், நீட் தேர்விலும் இதேபோல் கூடுதல் விருப்பத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே CBSE & மாநில அரசுகளின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்காது என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.