போலியோ சொட்டு மருந்து முகாம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி :
நாடு முழுவதும் ஜனவரி 17 ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்க இருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.இந்தநிலையில் வரும் 16 ம் தேதி முதல் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால் அவசர நிலை காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Read more – கல்லூரி மாணவர்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா இலவசம் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பரவியவர்களுக்கு குணப்படுத்த தீவிரமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்க உள்ளதால் மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.