இந்திய ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி மூலம் இனி நாடுமுழுவதும் பேருந்தில் பயணிப்பதற்கான முன்பதிவு திட்டத்தையும் செயல்படுத்துகிறது.
புதுடெல்லி :
இந்திய ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி மூலம் இனி நாடுமுழுவதும் பேருந்தில் பயணிப்பதற்கான முன்பதிவு திட்டத்தையும் செயல்படுத்துகிறது. IRCTC செயலியில் பேருந்து முன்பதிவு செய்யும் வகையில், செயலி மேம்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த புதிய முறையானது முதல் வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்தியாவின் பல்வேறு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. ஒப்பந்தம் செய்து வருகிறது.
IRCTC செயலியை பெறுவது எப்படி ?
ஆண்ட்ராய்டு செல்ஃபோனில் கூகுள் பிளே (Google Playstore) அல்லது ஆப்பிள் செல்போனில் ஐ.ஓ.எஸ் (iOS)- செயலிக்கு சென்று ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC APP)- என்று டைப் செய்து செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் தங்களது பெயர், மெயில் ஐடி அல்லது மொபைல் எண் மூலம் நிரந்தர பதிவு செய்து கொண்டு இந்தியாவில் எங்கிருந்து எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தேர்வு செய்து இருக்கையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம்.
Read more – அமெரிக்காவில் வயாகரா மாத்திரையுடன் சிக்கிய இந்திய பயணி .. கொத்து கொத்துக்காக அள்ளிய போலீஸ்..
இதனைத்தொடர்ந்து, https://www.bus.irctc.co.in/home என்ற இணையதளத்திற்கு சென்றும் பேருந்து டிக்கெட்டுகளை பொதுமக்கள் எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம். IRCTC இணையதளம் மூலம் ஏற்கனவே ரயில் டிக்கெட் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருந்த நிலையில் தற்போது புதிதாக பேருந்து டிக்கெட்டையும் அறிமுகப்படுத்துகிறது.