வேளாண் மசோதா சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கிய விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 26 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.மேலும் திங்கள் கிழமை(இன்று) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் என்றும், அதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றும் சுவராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில்,போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தகவல்களை பரிமாற தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பெயரிலான பேஸ்புக் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் திடீரென முடக்கியது.மேலும் இதேபோல் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டது. போராட்டக்களத்தில் விவசாயிகள் இந்த பக்கங்கள் மூலமாக தான் போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து நேரலை மற்றும் இன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் குறித்து தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
Read more-உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி : 3 தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்கள்
அடுத்த 3 மணி நேரத்தில் கிசான் ஏக்தா மோர்ச்சாவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது குறித்தும்,சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது.ஆனால் எதற்காக முடக்கப்பட்டது என்ற காரணத்தை மட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்த திடீர் முடக்கத்தால்,விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.