உலகின் மிக நீளமான விமான பாதைகளில் சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான விமானத்தில் பெண் விமானிகளால் மட்டுமே இயக்கப்படுகிறது.
புதுடெல்லி:
இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக உலகின் மிக நீளமான விமான பாதைகளில் ஒன்றான சான்பிரான்சிஸ்கோ முதல் பெங்களூரு இடையிலான விமானத்தை முழுவதும் பெண்விமானிகளே இயக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 16 ஆயிரம் கிமீ தூரம் கொண்ட இந்த மிக சவாலான பாதையாய் கடக்க பனிப் படர்ந்த வடதுருவத்தின் வழியாக இயக்கவேண்டும்.
Read more – இறுதி சடங்கு செய்யப்பட்ட கணவன் : 4 நாட்களுக்கு பிறகு உயிரோடு வந்ததால் மனைவி அதிர்ச்சி
சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்படும் இந்த விமானம் வேறு எங்கும் தரையிறக்கப்படாமல் நேரடியாக பெங்களூர் வந்தடைகிறது. இந்த பாதையில் மொத்த விமான நேரம், குறிப்பிட்ட நாளில் காற்றின் வேகத்தை பொறுத்து 17 மணி நேரத்துக்கும் மேலாக இருக்கும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான பயணம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ஏர் இந்தியாவின் பெண்கள் சக்தி உலகம் முழுவதும் உயர பறக்கிறது என்றார்.மேலும், இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோர்க்கு எனது வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஏர் இந்தியா விமானம் கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் குழு நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு விமானம் வந்தடைகிறது.