வருகின்ற ஜனவரி 26 ம் தேதி முதல் சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாற்ற மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா :
மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய முயற்சியாக சிறைச்சாலையை சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலத்தில், சுதந்திர வீரர்கள் பலர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதனால் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு எரவாடா சிறைச்சாலையை தேர்வு செய்துள்ளனர்.
இதன்மூலம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் சிறைச்சாலையும் ஒன்றாக கருதப்பட்டு, பொதுமக்களுக்கு வரலாறு மற்றும் பண்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் தொடங்கி வைக்க இருக்கின்றனர்.
Read more – கார் பார்க்கிங்கில் உறங்கிய அமெரிக்க பாதுகாப்புப் படையினர் : மன்னிப்பு கேட்ட அதிபர் ஜோ பைடன்
மேலும், வேறு சில சிறைச்சாலைகளும் சுற்றுலா தலமாக மாற்ற மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துவருகிறது. கடந்த காலத்தில் இங்கு என்ன நடந்து இருக்கும் என்பதை மக்களுக்கு புரிய வைக்கவே இந்த திட்டம் தொடங்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.