தலைநகர் டெல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் அதிக அளவில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தனர். பெரும்பாலானோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் மண்டலங்கள் வாரியாக டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இன்று டெல்லி நிர்வாகம் தெரிவித்துள்ள செய்தியில் டெல்லியில் இதுவரை 723 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு ஒரே ஆண்டில் அதிக அளவில் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு உறுதி செய்து இருப்பதாகவும், குறிப்பாக அக்டோபர் மாதத்தில் 16ம் தேதி வரை 382 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என டெல்லி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பு மழைக்காலம் முடிந்து இருந்தாலும் குளிர்காலம் வரை இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.