நந்திகிராமத்தில் மம்தா பானர்ஜி டீ விற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சுவந்த் அதிகாரிக்கு எதிராக நந்திகிராமத்தில் போட்டியிடும் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்ய நந்திகிராமம் சென்றிந்தார். அப்பொழுது, அங்குள்ள சண்டி தேவி கோயிலில் வழிபட்ட அவர், அம்மனுக்கு பட்டுப்புடவையை காணிக்கை செலுத்தி கோவில் மணியையும் ஒலித்தார்.
Read more – புதுச்சேரியில் புதிய புரட்சி… ஆய்வுக்காக பஸ்ஸில் பயணம் செய்த தமிழிசை…
பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சாலையோர தேநீர்க்கடைக்குள் நுழைந் மம்தா தேநீர் தயாரிக்க தொடங்கினார். பின்னர் தாம் தயாரித்த டீயை டம்ளர்களில் ஊற்றி, கடையிலிருந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.