பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு “இந்தி திவாஸ்” வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1949ம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக “இந்தி” மொழி அங்கீகரிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக செப்டம்பர் 14ம் தேதி “இந்தி தினம்” இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவிக்கும். ஆனால், 2014ம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்தி மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்தி தினம் இன்று கொண்டாட
படும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு “இந்தி திவாஸ்” வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவரின், சுட்டுரை பதிவில் :
“அனைவருக்கும் ஹிந்தி திவாஸ் வாழ்த்துக்கள்
இந்தியை ஒரு திறமையான மொழியாக மாற்றுவதில் பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்த மக்கள் பெரும்பங்கை மேற்கொண்டுள்ளனர் எனவும் அனைவரது முயற்சியின் விளைவால் இந்தி தொடர்ந்து உலக அரங்கில் வலுவான அடையாளத்தை உருவாக்கி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
இதுபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரும் இந்தி தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.




