பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும், பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூட கட்டிடப் பணிகள் இடைவிடாமல் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பாராளுமன்றக் கட்டிடம் ரூ.971 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிட பணிகள் குறித்து நேற்று இரவு 8.15 மணியளவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணிநேரம் கட்டுமான பணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கட்டுமான பொறியாளர்களுடனும் கலந்துரையாடல் செய்தார்.