ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

புதுடெல்லி:
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு கடந்த 2017 ம் ஆண்டு தமிழக அரசு சார்பில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது.இந்த வழக்கானது,3 ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இழுபறியில் இருந்து வருகிறது.
ஏற்கனவே,அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இந்த வழக்கின் விசாரணையை தடைசெய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது.அப்பொழுது இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.அதனைத்தொடர்ந்து இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
இதனையடுத்து, இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையத்தை தடைசெய்யக்கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான அப்துல் நசீர் வேறு ஒரு வழக்கை விசாரித்து வருவதால்,அப்போலோ நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மேலும் 4 வார காலத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.




