வேளாண் மசோதா சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது தற்போது முடிவு எடுக்கப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 22 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில்,வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்பினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணையானது இன்று உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் அமர்வுக்கு வந்தது.
Read more – மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் முறையீடு
அப்பொழுது,வேளாண் மசோதா சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது தற்போது முடிவு எடுக்கப்போவதில்லை என்றும்,விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.