பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 28 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கடும் குளிரையும் பாராமல் இரவு பகலாக தொடர்ந்து சாலைகளில் உறங்கியும், போராட்ட களத்தில் சமைத்து உணவருந்தி வருகின்றனர்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது.
Read more –அமெரிக்க வெள்ளை மாளிகையில் மேலும் 2 இந்திய வம்சாவளியினருக்கு பதவி : ஜோ பைடன் அறிவிப்பு
இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் திருத்தம் குறித்தும்,விவசாயிகளின் தொடர் போராட்டம் குறித்தும் பேசப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. மேலும் புதிய வகை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடர்பான முக்கிய விஷயங்களும் இதில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.