உலகமே இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்து போட்டிபோட்டு கொண்டு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றனர்.அமெரிக்கா,ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாட்டினருக்கு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்கா நாட்டில் உள்ள மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 95 சதவீதமும்,அதே நாட்டை சேர்ந்த ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீத வெற்றியுடன் முன்னிலையில் உள்ளனர்.அந்த வரிசையில் இந்தியா 3 கொரோனா தடுப்பூசிகள் தயாரித்து இறுதிக்கட்ட பரிசோதனை நிலையை எட்டியுள்ளது.
இந்தநிலையில் உலகமே இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்காக தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது எனவும்,உலகம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவர்களுக்கு தேவையான உதவி அளிப்பதில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும், மேலும் தடுப்பூசி தயாரிப்பதில் சர்வதேச முயற்சியில் இந்தியா முக்கிய புள்ளியாய் இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.