கேரள மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக ஒரே நாளில் புதிதாக 8135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, கேரள மாநிலத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதித்து உத்தரவினை பிறப்பித்துள்ளது. இதோடு அக்டோபர் மாதம் இறுதி வரை மாநிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சமூக மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் நிலைக்கு ஏற்றாற்போல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.