வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் இன்றுடன் 50 வது நாட்களை எட்டியுள்ளது.
புதுடெல்லி :
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 50 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடந்த 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
Read more – ஆசிரியரின் உடல் உறுப்புக்கள் தானம் : தான் மரணித்தும் 6 பேரை வாழவைத்த நெகிழ்ச்சி தருணம்
மேலும், வேளாண் சட்டங்கள் குறித்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது.உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முன்பு சந்திக்காமலும், அதே நேரத்தில் 15 ம் தேதி மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.இந்நிலையில் விவசாயிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 50 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து டெல்லியில் வருகின்ற ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.