இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ராகுல் காந்தி கூறியதால் அவர் மன்னிப்பு கூறவேண்டும் என்று உயர் ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தமிழகத்தில் கிராம சபை, தொழில் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் இந்திய எல்லையில் ராணுவம் தேவையில்லை என்று தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 26.01.2021!!!
இது குறித்து ராணுவத்தில் பணியுரியும் உயர்அதிகாரிகள் 20 பேர் விடுத்த கூட்டறிக்கையில் எல்லையில் கடும் பனியிலும் குளிரையும் பாராமல் காக்கின்றனர். தங்களது உயிர்களை துச்சமாக எண்ணி நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை ராகுல் காந்தி கொச்சைப்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தவறான கருத்துக்கு ராணுவ வீரர்களிடம் மன்னிப்பு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.