மராட்டியத்தில் போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் கொடுத்த ஊழியர்களால் 12 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை :
நாடுமுழுவதும் கடந்த ஞாயிற்று கிழமை அன்று 5 வயது உட்பட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. மராட்டியம் யாவத்மால் மாவட்டத்தை அடுத்த காப்சிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
போலியோ சொட்டு மருந்து உட்கொண்ட சிறிது நேரத்திலேயே ஒரு குழந்தை தீடிரென வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட்ட போது அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் பொதுமக்கள் விசாரித்துள்ளனர். அங்கு பணியாற்றிய ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசரை 12 குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
Read more – நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பவ்யா லால் நியமனம்..
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது உடல் நிலை தற்போது சீராக இருப்பாக யவத்மால் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ண பஞ்சால் தெரிவித்தார்.
மேலும், சம்பவத்தின்போது பணியில் ஒரு மருத்துவர், ஒரு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் உள்பட 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.




