டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசின் மீது அவதூறு பரப்பும் பதிவுகளை நீக்க தவறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி :
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்தான பதிவு ட்விட்டர் பக்கத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஏற்கனவே குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் ஏராளமான போலீசார் மற்றும் விவசாயிகள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து விவசாயிகளை மத்திய அரசு படுகொலை செய்வதாகவும், மத்திய அரசின் சுயலாபத்திருக்காக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்றும் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு எதிராக பதிவுகள் காணப்பட்டது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
Read more – இன்றைய ராசிபலன் 04.02.2021!!!
இதன்மூலம் மத்திய அரசின் மீது அவதூறு விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும், இதுபோன்ற 250 பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை ட்விட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தி இருந்தது.
எனினும் இந்த அறிவுரையை பின்பற்றாமல் இருந்த ட்விட்டர் நிர்வாகத்தின் மீது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது, அதில் மத்திய அரசின் மீது அவதூறு பரப்பும் பதிவுகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.