உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேசி ஒரு தீர்வை கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 21 வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்த போராட்டத்தினை நாடுமுழுவதும் தீவிர படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,விவசாய போராட்டத்தில் 40 க்கும் அதிகமான விவசாய அமைப்பினர்கள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த 40 விவசாய அமைப்பினரை சார்ந்திராத ஒரு அமைப்பு பாரதீய கிசான் யூனியன் (கிசான்) ஆகும்.இந்த அமைப்பினரை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.அதில் நில பாசனத்திற்காக மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்,சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் விவசாயிகளின் உரிமைகளை பெற,சந்தையின் தலைவரை போலவே உள்ளாட்சி அமைப்பினருக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால் சிவில் நீதிமன்றகளுக்கு செல்ல விவசாயிகளுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதனைத்தொடர்ந்து பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்த பாரதீய கிசான் யூனியன் (கிசான்) அமைப்பினருக்கு எனது நன்றி,நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு இருக்கிறது.உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேசி ஒரு தீர்வை கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




