இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில்,இந்தியாவில் ஜனவரி முதல் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த இருக்கிறோம்.அதன் முதற்கட்டமாக ராணுவ வீர்கள்,சுகாதார பணிகள்,முதியோர்கள் 30 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செயல்படுத்தப்பட உள்ளோம்.
மேலும், தடுப்பூசி தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு மட்டுமே அளிக்கும் நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். அதில் யாருக்கும் எந்தவித சமரசமும் அளிக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Read more – சபரிமலையில் 5,000 பக்தர்கள் அனுமதி குறித்து கேரள அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை :திருவிதாங்கூர் தேவஸ்தானம்
இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று குறைந்தாலும் கூட நமக்கு பாதுகாப்பு மிக முக்கியம்.முகம் கவசம் அணிதல்,சமூக இடைவெளி கடைபிடித்தல்,கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்றவை கட்டாயம் பின் தொடர்தல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.